காட்மண்டு
நேபாளத்தில் பல வருடங்களுக்குப் பிறகு பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
கடந்த 1999க்குப் பின் இது வரை தேர்தல் நடக்காத நேபாளத்தில் இன்று பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சிறு சிறு சம்பவஙகள் நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள ராணுவம் அதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்தியாவுக்கான நேபாள தூதராக பணியாற்றி வந்த தீப் குமார் உபாத்யா தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத் தக்கது.