டெல்லி

ன்று நாடாளுமன்றத்தில்ல் அரசியல் சாசனம் மீது விவாதம் நடைபெற உள்ளது.

கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, நமது நாட்டின் அரசியலமைப்பு சாசனம்  முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது அரசமைப்பு சாசனம் ஏற்கப்பட்டு 75-வது ஆண்டை எட்டியதைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் விவாதம் நடத்தப்ப உள்ளது.

இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுவார். விவாதம் கேள்வி நேரத்துக்குப் பிறகு தொடங்கும் என மக்களவை நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

நாளை அரசியல் சாசனம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை  மக்களவையில் பதில் அளிக்கிறார்.

வருகிற 16, 17-ந்தேதிகளில் மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி  17 ஆம் தேதி மாநிலங்களவயில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.