திருவள்ளூர்

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

கடந்த 15-9-2022 அன்று தமிழக முதல்வர் மு. க  ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டம்தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், இன்று  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைக்கிறார்.

இதன் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.