டில்லி
இன்று டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் அவசரமாக கூடுகிறது.
டில்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக இன்று நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் 13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடத் தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
தமிழக அதிகாரிகள் தமிழகத்தின் நிலை குறித்து எடுத்துக் கூறுவதோடு, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவைக் கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.