டில்லி

ற்போது 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இவ்வாறு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தரப் பிரதேசத்தின் கோசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மீதமுள்ள தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை  தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளன.