ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலின் போது 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்த பகுதி இளைஞர்கள் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற வன்முறையில் 5 பொதுமக்களும் இறந்தனர்.
இந்நிலையில், ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் கிலானி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பதற்றமான இடங்களில் பாதுகாப்பு கருதி ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.