
டில்லி
டில்லியில் இன்று ஆசியான் மாநாடு துவங்குகிறது.
ஆசியாவில் உள்ள மியான்மர், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடும் ஆசியான் மாநாடு இன்று தொடங்குகிறது இரண்டு நாட்கள் நடைபெற போகும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள 10 நாடுகளின் தலைவர்களும் இந்தியா வந்துள்ளனர்.
இந்த மாநாடு ஆசிய நாடுகளின் உறவின் 25ஆம் ஆண்டு நிறைவைக் குறிப்பதாக பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது. இந்த மாநாட்டில் ஆசிய நாடுகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் அனைத்து விவகாரங்கள் பற்றியும் கலந்துரையாடல் நிகழும் என கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel