மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 9.830 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 9,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 59,44,710 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 636 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,16,026 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,890 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 56,85,636 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,39,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 12,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 27,73,944 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 88 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 13,614 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 13,614 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,53,207 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,08,523 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.