மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 8,535 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 8,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 61,57,799 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 350 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,25,878 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 6,013 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 59,12,479 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,16,165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 12,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 30,65,336 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 97 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 14,586 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 12,502 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,35,423 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,14,852 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.