டெல்லி
இன்று டெல்லியில் 54 ஆவது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இன்று டெல்லியில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் காப்பீட்டு தவணைக் கட்டணத்துக்கு (ப்ரீமியம்) விதிக்கப்படும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி விகித சீரமைப்பு தொடர்பான அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) பரிந்துரைகள், இணைய விளையாட்டுகள் தொடர்பான ஜிஎஸ்டி நிலவர அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
எதிர்க்கட்சியினர் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவாதங்களில் வலியுறுத்தி ள்ளனர்னர். மேலும் இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கடிதம் எழுதியுள்ளளர்
எனவே ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல், மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு விலக்களித்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.