மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 5,031 மற்றும் கேரளா மாநிலத்தில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 5,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,37,680 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 216 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,36,571 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,380 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,47,414 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 50,183 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 31,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 38,83,429 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 215 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,972 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,271 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,92,628 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,70,312 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.