சென்னை

ன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செயப்பட்டுள்ளன.

இன்று காலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில், நெல்லை- சென்னை வந்தே பாரத் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி அருகே ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்று கொண்டிருந்த நெல்லை, குமரி விரைவு ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் 2 ரயில்கள் விழுப்புரத்தில் வெள்ள பாதிப்பு எதிரொலியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  அதாவது சென்னை-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்- தாம்பரம் ரயில், புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.