மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 3,623 மற்றும் கேரளா மாநிலத்தில் 20,240 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 3,623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 64,97,877 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,38,142 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 2,972 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 63,05,788 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 50,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 20,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 43,75,431 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,551 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 29,710 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 41,30,065 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,22,292 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.