சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 206 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,043 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,47,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 8,449 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 164 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,37,409 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 26,47,041 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 211 உடன் முதல் இடத்தில் உள்ளது.