ஜூலை 20
 
1
பன்னாட்டு நட்பு நாள்
 ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்டு மாத முதல் ஞாயிறு அன்று பன்னாட்டு நட்பு நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதுடன் தங்கள் அன்பைத் தெரிவிக்கும் விதமாக பூக்கள், வாழ்த்தட்டைகள், கங்கணக் கயிறுகளை பரிமாறிக் கொள்கின்றனர்
1935ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றம், இந்த நாளை அறிவித்தது. அன்று முதல், தேசிய நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவது ஓர் வருடாந்திர நிகழ்வாக மாறியது.
இதனைப் பின்பற்றி உலகின் பல நாடுகளும் நண்பர்களுக்காக ஒருநாளை ஒதுக்கி கொண்டாடி வருகின்றன. 1997ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் வின்னி த பூ என்ற பொம்மை கரடியை உலகின் நட்பு தூதராக அறிவித்தது.
நண்பர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
 2
பன்னாட்டு மர நாள்
உலகில் பசுமை அருகிவருவது குறித்தும், இதனால் ஏற்படும் அபாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இன்று ஒரு செடியை நட்டு, நீங்களும் மர நாளை கொண்டாடுங்களேன்.
3
அனைத்துலக சதுரங்க நாள்
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி, சதுரங்க நாள் கொண்டாடப்படுகின்றது. சதுரங்கம் அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டு.  மதியூகமும், தந்திரமும் இந்த  விளையாட்டுக்கு முக்கியம்.  அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுகிறது. 
4
நிலவில் மனிதன் (1969)
அப்பல்லோ 11 விண்கலத்தின் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், அவரது சகாவான எட்வின் ஆல்ட்ரினும் நிலவுக்குச் சென்ற  நாள் இது.  இவர்கள் மூன்று மணி நேரம் நிலவில் உலவினர். நிலவின் மண் மாதிரிகள் சேகரிப்பு, சோதனைகள் செய்தனர்.  இந்த அனுபவத்தைப் பற்றி நீல் ஆம்ஸ்ட்ராங், “மனிதனுக்கு இது ஒரு சிறிய காலடி, ஆனால் மனித குலத்திற்கு இது பெரும் படி” என குறிப்பிட்டிருந்தார்.
 
5
புரூஸ் லீ நினைவு நாள்
என்டர் த டிராகன், த வே ஆஃப் த டிராகன் போன்ற படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்ற தற்காப்புக்கலை நிபுணரும் ஹாலிவுட் நடிகரும் ஆன புரூஸ் லீ க்கு இன்று நாற்பதியிரண்டாம் நினைவு நாள். கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்பு கலை அவரது பெயரிலேயே ‘புரூஸ் லீ குங்பூ’ என அழைக்கப்பட்டது.
என்டர் த ட்ராகன்’ வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. ‘கோமா’ நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு. அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கொலை செய்யப்பட்டார் என்றும் இருவேறுவித கருத்துக்கள் நிலவுகின்றன.