சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று, ஒரே ஊரில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, இன்றைய பாதிப்பு மட்டும் 191 ஆக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடியில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஜூன் 30ந்தேதி மாலை நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 284பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மேட்டூர் பண்ணவாடியில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு ஏற்கனவே கொரோனா கண்டறியப்ட்ட நிலையில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

Patrikai.com official YouTube Channel