சென்னை
தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்
இன்று தமிழகத்தில் 1,54,631 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 3,99,58,164 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இதுவரை 25,90,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 34,519 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,35,715 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.