மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,783 மற்றும் கேரளா மாநிலத்தில் 17,681 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,07,930 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 56 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,277 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,364 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,17,070 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,034 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 44,24,046 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 208 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,987 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 25,558 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 42,09,746 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,90,790 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.