திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 12,616 மற்றும் மகாராஷ்டிராவில் 2,876 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிராவில் இன்று 2,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,67,791 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 90 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,362 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,763 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,91,662 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,181 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 12,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 47,51,407 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,811 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 14,516 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 46,02,600 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,22,467 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.