ராமேஸ்வரம்

ன்றும் நாளையும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாம்பன் பாலத்தில் ஆய்வு நடத்த உள்ளார்.

கடந்த 1914ம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பாம்பன் பாலம் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.  கப்பல்கள் வந்து செல்லும் போது, திறந்து மூடும் வகையில் கட்டப்பட இந்த பாலம் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக யில் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது.

கடந்த 2019 ஆம் அண்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் சுமார் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவில் திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

பாலத்தை ஆய்வு செய்வதற்காக பெங்களூருலிருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர்ர் ஏ.எம். சவுத்ரி இன்று பாம்பன் வந்து இன்று காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இருந்தபடி முழுமையாக ஆய்வு செய்யும்போது மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் வரையிலும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் அதிவேகத்தில் ரயில் இயக்கியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த புதிய பாம்பன் பாலத்தை இன்றும், நாளையும் 2 நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய இருக்கிறார். ஆணையரின் ஆய்வுக்கு பின்னர் புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.