நெல்லூர்:

ந்திர மாநில விவசாயி ஒருவர், கண் திருட்டியில் இருந்து பயிர்களை பாதுகாக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனின் கவர்ச்சி பட கட் அவுட் வைத்துள்ளார். இது பார்ப்பவர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை பாதுகாக்க வைக்கோல் போரில் உருவாக்கப்பட்ட பொம்மைகளை ஆங்காங்கே வைத்திருப்பது விவசாயிகளின்  வழக்கம்.  இதை மூட நம்பிக்கையாக பலர் சொன்னாலும்,  வயல்வெளியில் இருந்து பறவைகள், மற்றும் விலங்களிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக,  பயமுறுத்துவது அல்லது அசிங்கமான, அச்சமற்ற பொம்மைகளை விவசாயிகள் வைத்து வருகின்றனர்.

இதுபோன்ற பொம்மைகள் காரணமாக பயிர்களின் மீது படும் கண்திருஷ்டி போய்விடும் என்பதும் ஐதிகம். இந்நிலையில், ஆந்திர விவசாயி ஒருவர் நூதன முறையில், திருஷ்டி பொம்மைகளுக்கு பதில், சன்னி லியோனின் கவர்ச்சி பட கட் அவுட் வைத்துள்ளார். இதன் காரணமாக தனது பயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார். இது பரபரப்பாக பேசப்படுகிறது.

நெல்லூர் மாவட்டம் பாண்டா கண்டிபேலே கிராமத்தை சேர்ந்த விவசாயியான செஞ்சுரெட்டி (வயது 45) என்பவர் இந்த நூதன முறையான சன்னி லியோனின்  கண் திருஷ்டி பொம்மை வைத்துள்ளார்.

இதுகுறித்து செஞ்சுரெட்டி கூறியதாவது,

 

 

“இந்த ஆண்டு நான் 10 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளேன்.  குறிப்பாக முட்டைகோஸ், காலி பிளவர் போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளேன். தற்போது  இது தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ளது.  இது கிராமவாசிகள் மற்றும் பாவனையாளர்களின் தேவையற்ற கவனத்தை ஈர்த்து வருகிறது. .

சில நாட்களுக்கு முன்னர் நகரத்திற்கு சென்றிருந்தபோது, சன்னி லியோனின் பெரிய பிளக்ஸ் பேனரை பார்த்தேன். அதன் காரணமாகவே தனக்கு இந்த யோசனை உதயமானது. அதையடுத்து, தனது விவசாய பயிர்களை எப்படி பாதுகாப்பது என்று யோசித்தேன். அப்போதுதான் தனக்கு இந்த யோசனை உதயமானது.

அதையடுத்து, தனது பயிர்களை  பார்க்கும் மற்றவர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக, சன்னி லியோன் கவர்ச்சி பட கட் அவுட் படத்தை வைத்தேன் என்று அதிரடியாக கூறினார். மற்றபடி தான் சன்னிலியோன் ரசிகர் கிடையாது என்றும் கூறி உள்ளார்.

இந்த  கட்அவுட்டின் கீழ் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட ஒரு வரி உள்ளது: அதில், “ஓரே, நானு சூசி எடகுவாரா (ஏய், என்னை பார்த்து அழாதடா)!

எனது இந்த தந்திரம் நன்றாக வேலை செய்துள்ளது என்றும், மக்கள் பார்வையை சன்னி லியோன் படம் திசைதிருப்பி உள்ளது என்றும் கூறி உள்ளார்.

இதன் காரணமாக தனது பயிர்களை யாரும் பார்ப்பதில்லை என்று கூறியுள்ள ரெட்டி, சன்னி லியோனை இழிவுபடுத்தும் வகையிலோ,  சட்டத்தை மீறியதாகவோ நான் இதை  நினைக்கவில்லை என்று கூறினார்.

எனது இந்த தந்திரத்துக்கு, விவசாய அதிகாரிகளோ அல்லது பொலீசாரோ ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்ற அவர், எங்களது பிரச்சினைகள் குறித்தும் கவலைப்படாத அதிகாரிகள், இதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்றும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆந்திர விவசாயியின் இந்த வித்தியாசமான முறையிலான திருஷ்டி பொம்மை கட்அவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.