சண்டிகர்:
ஹரியானாவில் ஒளிபரப்பாகும் எஸ் டிவி பெண் செய்தி வாசிப்பாளர் பிரதீமா துத்தா கடந்த ஜூன் 29ம் தேதி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு செய்தி வாசித்தார். இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானாவில் ஆளும் பாஜ அரசின் இதழின் துணை பதிப்பான கிரிஷி சம்வாட் என்ற மாதாந்திர இதழில் ஒரு பெண் முக்காடு அணிந்துள்ள புகைப்படம் வெளியாகியுளளது. அதில் முக்காடு அணிந்துள்ள பெண் தலையில் கால்நடைக்கான உணவை சுமந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கான படவிள க்கத்தில் ‘‘ஹரியானாவின் அடையாளமான முக்காடு அணிவதை பெருமையாக கொள்வோம்’’ என இடம்பெற்றுள்ளது.
மேலும், ஹரியானா பெண்கள் தலையில் முக்காடு போட்டு முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கெள்ளப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பெண் செய்திவாசிப்பாளர் தலையில் முக்காடு போட்டு முகத்தை மறைத்தவாறு செய்தி வாசித்தார்.இது அந்த டிவி.யில் நேரடியாக ஒளிபரப்பானது.
இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ தலையில் முக்காடு போட்டு முகத்தை மறைக்க வேண்டும் என்ற மாநில அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்படி போராட்டம் நடத்தப்பட்டது. மாநில அரசின் இதழில் இச்செய்தியை படித்தவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது. தலையில் முக்காடு போட்டு முகத்தை மறைப்பது மாநிலத்தின் அடையாளம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், கல்வி போதிக்க வேண்டும் என்று அரசு பிரச்சாரம் செய்து கொண்டு இது போன்ற மனநிலையை வெளிப்படுத்துகிறது. அனைத்து மாநில அரசுகளும் இதுபோன் மு க்காடு அணிய வேண்டும் என்று கூறினால் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தின் பயன் என்ன?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அரசு இதழில் வெளியான ஒரு படவிளக்கத்தில் முக்காடு போது மாநிலத்தின் அடையாளம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜ அரசின் பிற்போக்குத்தனம் இது பிரதிபலிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.