சென்னை:
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் கலவரங்களினால், அங்குப் பெருமளவில் வாழும் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கலவரத்தால், தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் உட்பட இந்தியர்கள் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தென்னாப்பிரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.