சென்னை: சனி, ஞாயிறு ஆகிய வார இறுதிநாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்கா தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

வார விடுமுறை நாட்களை கழிக்க சொந்த ஊர் மற்றும் வெளி இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. பயணிகள் நெரிசல் இன்று பயணிக்கவும் ஏதுவாக உள்ளது.

இந்த நிலையில், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி,  வரும்  21ம் தேதி வெள்ளிக்கிழமை 22ம் தேதி சனிக்கிழமை, 23ம் தேதி ஞாயிறு  ஆகிய நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 21ம் தேதி 245 பேருந்துகளும், 22ம் தேதி 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21ம் தேதி 51 பேருந்துகளும்  22ம் தேதி 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,

மேலும் மாதாவரத்திலிருந்து 21ம் தேதி 20 பேருந்துகளும் 22ம் தேதி 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.