மதுரை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉ ள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி-யிடம் இருநிது சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை அதிர வைத்துள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தவிவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை கோரி முறையீடு செய்துள்ளார்.  நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக ஆஜராக வழக்கறிஞர் நீலமேகம்,  குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

மேலும், தற்போது சீருடைப் பணியாளர் தேர்விலும், இதுபோலவே முறைகேடு நடைபெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால், இந்த முறைகேடுகள் குறித்த விசரணையை தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது, எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறினார்.

இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனுவாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.