சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன், லைன்மேன் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுவரை,. மின் வாரிய பணியாளர்கள் வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறியாளர் உட்பட ஒரு சில பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்கள் விரைவில் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். இந்த நிலையில், தற்போது 400 உதவி பொறியாளர்கள் மற்றும் 1850 கள உதவியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் ஒப்புதல் வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.