சென்னை:
தமிழ்நாடு பிரிமியல் லீக் (டிஎன்பிஎல்) போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த போட்டி, ஜூலை 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை சேலம் வாழப்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎல் கிரிக்கெட்வீரர்கள் ஒருவாரம் சேலத்தில் முகாமிடுகிறார்கள்…
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 5வது கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ஜூன் 10-ந்தேதி தொடங்குகிறது.
முதல்போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்ககிறது. நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ்-ரூபி திருச்சி வாரியா்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஜூலை 12-ந் தேதி நெல்லை அருகே உள்ள சங்கர்நகரில் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 14-ந்தேதி திருப்பூர் தமிழன்ஸ் அணியையும், ஜூன் 17-ந்தேதி திருச்சி வாரியர்ஸ் அணியையும், ஜூன் 19-ந்தேதி காஞ்சி வீரன்ஸ் அணியையும், ஜூன் 21-ந்தேதி மதுரை பாந்தர்ஸ் அணியையும், ஜூன் 28-ந்தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியையும், ஜூலை 3-ந் தேதி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியையும், ஜூலை 5-ந்தேதி கோவை கிங்ஸ் அணியையும் சந்திக்கிறது.
ஜூன் 29, 30 திங்கள், மற்றும் செவ்வாய்க்கிழமைகள் ஓய்வு நாளாகும்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே சேலம் கிரிக்கெட் புதிதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது.
ஜூலை 1ந்தேதி சேலம், கோவை அணிக்கும், ஜூலை 2ந்தேதி திருச்சி திண்டுக்கல் அணிக்கும், ஜூலை 3ந்தேதி சேலம் சென்னை அணிக்கும், ஜூலை 4ந்தேதி மாலை 3மணிக்கு திண்டுக்கல் திருப்பூர் அணிக்கும், இரவு 7 மணிக்கு திருச்சி, மதுரை அணிக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது.
ஜூலை 5ந்தேதி மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம், சேலம் அணிக்கும் இரவு 7 மணிக்கு சென்னை, கோவை அணிகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறுகிறது.
அடுத்து, 6 மற்றும் 7ந்தேதி ஓய்வு நாளாகும்.
ஜூலை 8-ஆம் தேதி திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் எலிமினேட்டா், அரையிறுதிப்போட்டி-1 நடைபெறுகிறது.
9-ஆம் தேதி ஓய்வு நாளாகும்.
ஜூலை 10-ஆம் தேதி திருநெல்வேலி சங்கா் நகா் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் அரையிறுதி-2 போட்டி நடைபெறும்.
11-ஆம் தேதிஓய்வு நாள்.
ஜூலை 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இறுதி ஆட்டம், சங்கா் நகா் இந்தியா சிமெண்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை 4 தொடர்கள் நடைபெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும் (2017, 2019), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகியவை தலா ஒரு தடவையும் டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.