சென்னை: மின்ஒருபுறம் மக்களிடம் மின்கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி மின்கட்டணம் உயர்த்தப்படும் என சூசகமாக தெரிவித்து உள்ளார். மற்ற மாநிலங்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையும், தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்து பேச வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு, தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது. ஏற்கனவே வீட்டு வரி உள்பட பல வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின்கட்டண உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என அறிவித்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது. அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. மேலும் மதுரை, கோவை, சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தியது. ஏற்கனவே ஆன்லைன் மூலம் பல ஆயிரம் பேர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
மின்சார வழங்குமுறை ஆணைய தலைவர் சந்திர சேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். ஏராளமானோர், மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்தியஅரசுக்கு தமிழகஅரசு செலுத்த வேண்டிய ரூ.70 கோடி மின் நிலுவை தொகை மத்திய அரசுக்கு மின்வாரியம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியவர், மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது என்றவர், வரும் காலங்களில் மின்சாரம் வாரிய போர்டெலை மேம்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றார்.
மின்கட்டண உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்வியால், கோபமடைந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, மற்ற மாநிலங்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை யும், தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்து பேச வேண்டும் என்றும் கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சு, தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு என்பதை உறுதி தெரிகிறது.