சென்னை

மிழக மின் வாரியம் கூடுதல் டெபாசிட் வசூலிப்பதை நுகர்வோரின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின் விநியோகம் செய்து இவ்வாறு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்துக்கான கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது.

இது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படும்.  இதற்கு மின்வாரியம் 4 சதவீத வட்டி வழங்குகிறது. குறிப்பாக டெபாசிட் தொகையைவிட மின் நுகர்வு கட்டணம் அதிகரிக்கும் போது கூடுதலாக இந்த டெபாசிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மின்கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து மீட்டர் ரீடிங் அட்டையில் மின்வாரிய ஊழியர்கள் குறிப்பிடுவது இல்லை என்பதால் நுகர்வோருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது., கடந்த 2 மாதங்களில் கோடை வெயில் காரணமாக வீடுகளில் ஏசி, மின் விசிறி ஆகியவை அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே          நுகர்வோருக்கு வழக்கத்தைவிட இந்த மாதம் கூடுதலாக மின்கட்டணம் வந்துள்ளது.

இந்நிலையில் கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் நுகர்வோருக்கு கடும் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தற்போது கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் இது குறித்து,

”கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதற்கு மின் நுகர்வோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கூடுதல் டெபாசிட் வசூலிக்க வேண்டாம் என முதல்வரும் அறிவுறுத்தி உள்ளார். எனவே, கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை, அடுத்த பில்லில் கழிக்கப்படும்’’

எனத் தெரிவித்துள்ளனர்