சென்னை: கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி டிசம்பர் 4ந்தேதிக்கு மாற்றம் செய்து வருவாய் நிர்வாகத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணிக்கு 10.10. 2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 5ம் வகுப்புதான் என்றாலும் பட்டதாரிகளும் இந்த பணிக்காக விண்ணப்பித்து உள்ளனர். 2748 இடங்களுக்கு  3 இலட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த  விண்ணப்பம் சரிபார்த்தல் பணிகள் 14.11.2022 தேதிக்குள் நடந்து முடிந்து , தகுதியான நபர்களுக்கு படிக்கும் திறன் மற்றும் எழுத்து திறன் 30.11.2022 அன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது.

அதன்படி,  தற்போது தகுதியான நபர்களுக்கு 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுத்துத் தேர்வு  நடக்கும் என்றும். தகுதியான நபர்களுக்கு விரைவில் நுழைவுச்சீட்டு அனுப்பப்படும் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக 04-12-2022 (ஞாயிறு) அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தேர்வு தேதியை மாற்றம் செய்து வருவாய் நிருவாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.