சென்னை: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் நடத்துநர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று போக்குவரத்து துறை  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பெண்களுக்கு இலவச பேருந்து அறிவிக்கப்பட்ட பிறகு அரசு போக்குவரத்து கழகம் கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது. இந்த பேருந்துகளில்  சாதாரமண பெண்கள் மட்டுமின்றி அரசு வேலைகளுக்கு செல்லும் பெண்களும் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்து துறை மேலும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்றவர்களுக்கு உரிய பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளது. இதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் அவ்வப்போது போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து கழகத்தில் வருமானத்தை பெருக்கும் வகையில், அதிக டிக்கெட் விற்பனை செய்யும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  பெரும்பாலான பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது,  டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் Credit Card, Debit Card, QR Code மூலமாக  பேருந்துகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.