சென்னை

ரசு வழங்கும் விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடை நாளை வழங்கப்பட உள்ளன.

தமிழக பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்கியது. மீண்டும் பள்ளிகள் வரும் 3 ஆம்தேதி அதாவது நாளை திறக்கப்படும் என அப்போதே அறிவிக்கப்பட்டது.. ஆயினும் கடும் கோடை காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. தமிழக பள்ளிக் கல்வித்துறை அதை மறுத்து நாளை பள்ளிகள் திறப்பதை உறுதி செய்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி நாளை அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா சீருடை, பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வருடம்தோறும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த விலையில்லா சீருடை மற்றும் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் நாளை அரசு வழங்க உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இவைகளை தமிழக பள்ளி கல்வி துறை அனுப்பி வருகிறது. அத்துடன் மடிக்கணினி உள்ளிட்டவைகளின் கொள்முதல் இனி தொடங்க உள்ளது.