தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாளை அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி திருநாள் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அதற்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதியையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

இதனால் தீபாவளி பண்டிகைக்கு சென்னை போன்ற நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் வார இறுதி நாட்களுடன் சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் நாளை அக்டோபர் 30ம் தேதி காலை அரை நாள் மட்டும் செயல்படும் என்றும் பிற்பகலில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை மட்டும் செயல்படும் என்ற அறிவிப்பால் மாணவர்கள் குதூகலமடைந்துள்ளனர்.