டெல்லி

மிழகத்தின் கல்வி குறித்து நிர்மலா சீதாராமன் விமர்சித்ததை எதிர்த்து தமிழக எம் பிக்கள்  வெளிநடப்பு செய்துள்ளனர்/

நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் கல்வி தரம் கொரோனாவுக்குப் பிறகு பின் தங்கி உள்ளதாக சுட்டிக்காட்டி பேசி மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை என்று விமர்சித்தார்.

தமிழக எம்.பி.க்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை குறித்தும் குறைகூறி பேசியதாக கூறி, அம்மாநில எம்.பி.க்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம்,

“ஒவ்வொரு நாளும் தமிழகத்தை அவமதிப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. நேற்று, கல்வி அமைச்சர் அந்த அவமானத்தை ஏற்படுத்தினார். இன்று நிதி அமைச்சர் தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

 தமிழகத்துக்கு திட்டங்களை வழங்குவதன் மூலம் ஏதோ தொண்டு செய்வது போல் காட்டுகிறார்கள். பா.ஜ.க. அரசு, தினமும் தமிழகத்தையும், மற்றும் எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது”

என்று கூறினார்.