திருச்சி: திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த கல்லணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் இன்று காலை தமிழக அமைச்சர்களால் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பாசன வசதிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று (புதன்கிழமை) காலையில் கல்லணை திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் ஆட்சியர்கள், அதிகாரிகள், விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர்.
உலகத்தில் பழமை வாய்ந்த அணையாக விளங்கும் அணைகளில் ஒன்று கல்லணை. இது சுமார் 1850 அடி நீளத்தில் 66 அடி அகலத்தில் 18 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணை மூலம் இரண்டரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணைக்கு காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் உள்ள திருவரங்கம் ஆற்றில் இருந்த து தண்ணீர் வருகிறது. அங்கிருந்துதான் காவிரி ஆறு நான்காக பிரிகிறது.