திண்டுக்கல்

மிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் ஆவார்.

சுமார் 67 வயதாகும் இவர் திண்டுக்கல்லில் தனது மகன் வெங்கடேசன் என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.

உடல் நிலை சரியில்லாமல் இருந்த கண்ணாத்தாள்  நேற்று மரணம் அடைந்தார்.

இவருக்கு அதிமுக, மற்றும் திமுக தலைவர்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

கண்ணாத்தாள் உடல் நேற்று மாலை கோவிந்த புரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.