சென்னை: மனிதர்களே மனித கழிவுகளை அள்ளுவதற்கு ஏற்கனவே தடை உள்ள நிலையில், அதை கண்காணிக்க மாவட்ட வாரியான கண்காணிப்பு குழுக்களை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களே மனித கழிவுகளை அகற்றுவதை தடுக்க கடந்த 2013ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, இயந்திரங்கள் மூலம் மனித கழிவு களை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், பல பகுதிகளில் இன்றுவரை மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடூரம் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தி உள்ளதுடன், மனித கழிவுகளை அகற்றுவதை தடுக்கும் தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும்படி மாநில அரசுக்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநில அரசுகள் பதில் அளிக்கவும் கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே மனித கவழிவுகளை அகற்றுவதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களை தமிழகஅரசு மாற்றி அமைத்து உத்தரவிட்டு உள்ளது. தற்போது மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.