சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்கிறோமோ, அதைப்போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டுமென்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழைப் போன்றே ஆங்கிலத்திலும் எழுத, உச்சரிக்க வேண்டும்.
தமிழகத்தில் எழும்பூர் என்று இருப்பது ஆங்கிலத்தில் Egmore என அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல், தமிழைப் போன்று ஆங்கிலத்திலும் Ezhumboor என்றே அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேபோல், திருவல்லிக்கேணி என்று இருப்பதை Triplicane என்று இனிமேல் உச்சரிக்கக் கூடாது. மாறாக, Thiruvallikkenni என்றே உச்சரிக்க வேண்டும். என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Tuticorin என்பதை Thoothukudi என்று அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழில் தஞ்சாவூர் என்பது, ஆங்கிலத்தில் Tanjore என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று பேட்டை, பாக்கம் என்று முடியும் ஊர்கள் ஆங்கிலத்தில் அதேபோன்று அழைக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.