சென்னை:
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, ஒரு மாத சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியிர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநகர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்பட பல்வேறு துறையினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, ஒரு மாத சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில்,
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும், மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.