சென்னை: கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸ் முழுமையாக கொடுக்க நிதி இல்லையா என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன், கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக அரசு நேற்று பொதுத்துறை ஊழியர்களான சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவிகித போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி, 3½ லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு 10 % மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  “தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.

கொரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை திமுக அரசு எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? “

இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.