சென்னை: ஊழல், குடிமைப் பணி இடையூறு காரணமாக சென்னை மாநகராட்சியின் இரண்டு திமுக கவுன்சிலர் உள்பட 4 கவுன்சிலர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
சென்னை உள்பட பல பகுதிகளில் பணியாற்றி வரும் கவுன்சிலர்கள், மக்கள் பணிகளை முறையாக செய்ய தவறுவதுடன், அதற்காக லஞ்சம் மற்றும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பொதுமக்களின் குற்றச்சாட்டுகளின் பேரில், சென்னை மாநகராட்சியில் இரண்டு திமுக கவுன்சிலர்கள், தாம்பரம் மாநகராட்சியின் சுயேச்சை கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோரை தமிழ்நாடு அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துஉத்தரவிட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின், 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆகிய இரு கவுன்சிலர்களும் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், அவர்களின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை தாம்பரம் மாநகராட்சியில், 40வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயபிரதீப்,. உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
உள்ளாட்சி விதிகளை மீறி ஊழல் மற்றும் அரசு பணிகளுக்கு இடையூறு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவர்களை தமிழ்நாடு அரசு அதிரடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக . நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் செயலாளர் டி. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில், குடிமைத் திட்டங்களைத் தடுத்த தற்காகவும், தவறான நடத்தைக்காகவும் சென்னையைச் சேர்ந்த இரு கவுன்சிலர்கள் உட்பட நான்கு கவுன்சிலர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்து, அவர்களின் பதவிகளை நீக்கியுள்ளது
🔹 திமுக கவுன்சிலர் வி. பாபு (வார்டு 189, பள்ளிக்கரணை) 4,800 வீடுகளுக்கான நீர் வழங்கல் திட்டத்தை முடக்கினார், குடியிருப்பாளர்கள் தனது உதவியாளர்களிடம் இணைப்புகளைப் பெற பேசுமாறு வற்புறுத்தினார், மேலும் குடிபோதையில் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளைத் தாக்கினார். மெட்ரோ வாட்டர் பொறியாளர்களை விநியோக இணைப்பு போர்ட்டலில் உள்நுழைவு சான்றுகளை வெளியிடும்படி கட்டாயப்படுத்தினார்.
🔹 திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி. சங்கரின் சகோதரர் திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி. சங்கரின் சகோதரர் கே.பி. சொக்கலிங்கம் (வார்டு 5, திருவொற்றியூர்), ஒரு முக்கியமான சாலை தொடர் இணைப்புத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, பொறியாளர்கள் பணி அவசியம் என்பதை உறுதிப்படுத்திய போதிலும், ஒரு போராட்டத்தை உருவாக்கினார். அவரது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், பொதுப் பணிகளைத் தடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔹 குடிமைத் திட்டங்களை சீர்குலைத்ததற்காகவும், பொதுமக்களின் குறைகளை புறக்கணித்ததற்காகவும் தாம்பரத்தைச் சேர்ந்த சுயேச்சை கவுன்சிலர் சி.ஜெய பிரதீப் (வார்டு 40) மற்றும் கே.சகுந்தலா (உசிலம்பட்டி நகராட்சி) ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 இன் பிரிவு 52(1) இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.