சென்னை: தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற DISHA Committee கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது. மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி ஆகியவற்றை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும். ஊரக பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து பேசிய முதல்வர், வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், ஆதி திராவிடர்கள் 50%க்கு மேல் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டத்தின் பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பட்டினியின்மை என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கிராமப்புற வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்புத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கிராமப்புற வளர்ச்சி என்பது மிக மிக முக்கியம்:
எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம். கிராமப்புற வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. ஆதி திராவிடர்கள் 50 சதவீதத்துக்கு மேல் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டத்தின் பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பட்டினியின்மை என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்க ஆணையிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வளர்ச்சிப்பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்பு திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அங்கன்வாடி மையங்களில் வாரம் ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடைகள் நவீனமயக்கப்பட்டு வருகிறது எனவும் முதலமைச்சர் கூறினார்.
பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது; மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சியை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பொதுமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் முதலைச்சர் கூறினார்.
முதலமைச்சுரு தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.