சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்களை தெரிவிட்துள்ளார்

ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர் என் ரவி,

”பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள்! பஞ்சாயத்து ஆட்சிமுறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. 

காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் போன்ற நமது கலாசார பாரம்பரியக் கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியமாக உள்ளன. 

இன்று, பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன”. 

என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.