சென்னை: சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஞாயிறுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் அதிக அளவில் மக்கள் குவிய ஆரம்பித்து உள்ளனர். போதிய சமூக இடைவெளியின்றி மக்கள் குவிவதால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
அதனைத் தடுக்கும் வகையில் சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கத்தின்போது இறைச்சி கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சனிக்கிழமையும் கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.