சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதும் பொறியில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கியது. அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய ஜூலை 19 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. மேலும்,  விண்ணபித்த அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 22 ஆம் தேதி சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் ஜுலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தொடர்ந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் மாணவர்கள் சேவை மையம் வாயிலாக குறைகளை ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை சரிசெய்து கொள்ளலாம். தொடர்ந்து,  ஆகஸ்டு 16 முதல் அக்டோபர் 16ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் சிபிஎஸ்இ 12ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், அவர்களும் விண்ணப்பிக்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை முடிக்கக்கூடாது யுஜிசி மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இதன் காரணமாக,   பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.  நாளை மறுநாள் (18ந்தேத) கவுன்சிலிங் தொடர்பாக புதிய அட்டவணை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.