சென்னை: தேர்தல் மற்றும் வாக்காளர் குளறுபடி குறித்து தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை சில மாநிலங்களில் இருந்தாக புகார் கூறப்பட்டது. இந்த விவகாரத்தை கிளம்பிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்காக மோசடி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், குஜராத், ஹரியானாவில் உள்ள வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன்முலம் பாஜக சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இது போன்று, ஒரே அடையாள எண் இரண்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இதை போலி என கூறமுடியாது. ஆனால், அவர்களுடைய வசிப்பிட விபரம், சட்டசபை தொகுதி விபரம், ஓட்டுச் சாவடி விபரம் வெவ்வேறாக இருக்கும். வாக்காளர் அடையாள அட்டையில் கூறப்பட்டு உள்ள ஓட்டுச் சாவடியில் மட்டுமே ஓட்டளிக்க முடியும். ஒரே அடையாள எண் இருப்பதால், ஒரு மாநிலத்தில் உள்ளவர், மற்றொரு மாநிலத்தில் ஓட்டளிக்க முடியாது என கூறியிருந்தது.
தொடர்ந்து, இந்த பிரச்சினை குறித்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறிய அனைத்து மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரிகளையும் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையும் கோரியிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துகளை அறிய அா்ச்சனா பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு , இநத் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தாா். அந்த கட்சி உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 12 கட்சிகள் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனா்.