சென்னை

மிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் மாவட்ட வாரி பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082 ஆகி உள்ளது.

இதுவரை 118 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 8731 பேர் முழுவதுமாக குணம் அடைந்து தற்போது 8230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் அதிக அளவில் சென்னையில் 11,131 பேர் பாதிக்கப்பட்டு 84 பேர் மரணம் அடைந்து 5135 பேர் குணமடைந்து தற்போது 5911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 832 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் மரணம் அடைந்து 255 பேர் குணமடைந்து தற்போது 568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 764 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் மரணம் அடைந்து 326 பேர் குணமடைந்து தற்போது 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு இல்லாமல் உள்ளன.