சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 5242 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,51,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10,187 பேர் உயிர் இழந்து 5,97,033 பேர் குணம் அடைந்து தற்போது 44,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,80,571 பேர் பாதிக்கப்பட்டு 3396 பேர் உயிர் இழந்து 1,63,778 பேர் குணம் அடைந்து தற்போது 13,577 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில்  39,102 பேர் பாதிக்கப்பட்டு 595 பேர் உயிர் இழந்து 36,191 பேர் குணம் அடைந்து தற்போது 2,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில்  36,725 பேர் பாதிக்கப்பட்டு 487 பேர் உயிர் இழந்து 31,319 பேர் குணம் அடைந்து தற்போது 487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.