சென்னை: தமிழக அரசின் மாநில அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்


இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு. கழக இளைஞர் அணி செயலாளராக மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.
ஏற்கனவே, தி.மு. கழகத்திற்கு இளைஞர்களை அணி திரட்டுவதில் சாதனை படைத்த அவர், இளைஞர் நலன் சார்ந்த துறையிலும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையிலும் பல அரிய சாதனைகளை நிச்சயம் படைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறையையும் வழங்கியிருப்பது மிகமிக பொருத்தமாகும். தமிழக அரசின் திட்டங்கள் சரியாக செயலாக்கம் பெறுகிறதா என்பதை கண்காணிக்கிற பொறுப்பின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிற பணியை இவர் சிறப்பாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இத்தகைய பொறுப்பை ஏற்பதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உரிய பங்கை ஆற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களது பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துகள்.
இவ்வாறு கூறி உள்ளார்.

Patrikai.com official YouTube Channel