டில்லி

காற்றாலை திறனை அதிகப்படுத்தி மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது/

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதுபோன்று காற்று என்பது மிகமிக முக்கியம். காற்று இல்லாமல் உயிர்வாழ முடியாது.  ஆண்டு தோறும்  உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

காற்ற் என்பது மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் மிகவும் அவசியமானதாகும்.  காற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 2007-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு தற்போது ஓர் உலகளாவிய நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.

நேற்று உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காற்றாலை திறன் அதிகப்படுத்துவதில் நாட்டிலேயே 3 வது இடத்தை பிடித்துள்ளது.  நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதினை தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஸ் லகானி பெற்றுக் கொண்டார்.